News Just In

5/03/2021 09:19:00 PM

நாட்டில் விரைவாக பரவுகின்ற திரிபடைந்த கொரோனா வைரஸ்- தொடர்ந்தும் பாடசாலைகளை மூடி வைப்பதே சிறந்தது- பேராசியர் நீலிகா மலவிகே!!


தற்போதைய சூழ்நிலையில், பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதே சிறந்தது என்று, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று விஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் பேராசியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பரவுகின்ற திரிபடைந்த வைரஸானது, சிறார்களையும் பாதிக்கக்கூடியது.

அத்துடன், இது மிகவும் வேமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது.

எனவே, பாடசாலைகளை மூடுவதற்கு மேற்கொண்ட தீர்மானம் சிறந்த தீர்மானமாகும்.

அதேநேரம், மாணவர்களுக்கு கொவிட் நோய் மாற்றுவழிகளில் பரவாது தடுக்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக பாடசாலைகளுக்க விடுமுறை விங்கப்பட்டுள்ள நிலையில், சிறார்களை சுகாதார கட்டுப்பாடுகளுடன் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பிரஜைகள் சுகாதார விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று வரையில், கொவிட்-19 தொற்றுறுதியான 70 கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கர்ப்பிணி தாய்மார்கள் முடியுமானளவு தமது பயணங்களை குறைத்து கொள்ள வேண்டும்.

பிறந்து ஒரு மாதம் முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மூச்சுதிணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் இருப்பார்களாயின் அவர்களுக்கு அருகில் குழந்தைகளை அனுமதிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அத்துடன், சிறுவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வீடுகளில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் பிரஜைகள் சுகாதார விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: