News Just In

5/06/2021 08:00:00 AM

ஜனாதிபதியும், பிரதமரும் நீதியாக விசாரணைகளை மேற்கொண்டு ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்ய வேண்டும்- ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
ரிஷாத் பதியூதீன் நீதியாக விசாரிக்கப்பட்டு அவருக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி புதன்கிழமை (5) ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ரிஷாத் பதியூதீன் கைது செய்யப்படட்ட விடயத்தில் நீதித்துறை நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன், இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நேரடியாக சம்மந்தப்பட்டு நீதியாக இவ் விடயத்தை தீர்த்துத் தரவேண்டும் என்று இந்த நாட்டு மக்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ரிஷாத் பதியூதீன் பல தடவைகள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்பட்ட நிலையிலே அவர் மீண்டும் எதிர்பாராத முறையில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நோன்பு காலத்தில் அவர் நியாயமற்ற விதத்தில் முன்னறிவித்தலின்றி கைது செய்யப்பட்டுள்ளமை சிறுபான்மை மக்களை கவலையடையச் செய்துள்ளது.

எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் நீதியாக விசாரணைகளை மேற்கொண்டு நடுநிலையாக நின்று நல்ல தீர்வை வழங்கி ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் சார்பாக நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments: