News Just In

5/23/2021 02:29:00 PM

அக்கரைப்பற்றில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது- ஐந்து இராணுவத்தினர் படுகாயம்...!!


அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை நுழைவாயிலில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் இராணுவம் பயணம் செய்த வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஐந்து இராணுவ வீரர்கள் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு வீரர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒரு வீரர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









No comments: