News Just In

5/28/2021 11:45:00 AM

எதிர்வரும் 7 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்படுமா?- இறுதி தீர்மானம் இன்று...!!


நாடு முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொவிட்19 தொற்றை கட்டுப்பாட்டுப் படுத்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது.

எதிர்வரும் 7 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு அமுலாக்குவதாக இல்லையா என்று இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

கடுமையான நடமாட்டக்கட்டுப்பாடு அமுலப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியின் இடைநடுவே, கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

இந்த காலப்பகுதியினுள் பொதுமக்கள் நடத்தைக் கோலம் மகிழ்ச்சியடையக் கூடிய வகையில் இல்லை என பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவுகள் சுட்டிக்காட்டியிருந்தன.

எனவே, எதிர்வரும் காலங்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள இரு தினங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவு கோரியிருந்தது.

எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், தற்போது இடம்பெறும் ஜனாதிபதி மற்றும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலின்போது, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

No comments: