News Just In

5/05/2021 05:06:00 PM

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா- களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் 12 பேருக்கு உறுதி; செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டது!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் 12 பேர் உட்பட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து புதிய அலையில் 14 நாட்களில் 190 பேருக்கு தொற்று உறுதி எனவும் களுவாஞ்சிக்குடி பிரதேச செலகம் தற்காலிகமாக மூடுப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (06) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடர்ந்து பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 31 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது

களவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 12 உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது இதனையடுத்து பிரதேச செயலகத்தை தற்காலிகமாக மூடி கிருமிநாசினி தெளித்து பின்னர் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை கடந்த ஏப்ரல் 22 ம் திகதி முதல் கொரோனா புதிய அலை ஆரம்பித்து இன்று 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் 191 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டுவெளியேறாது தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படவும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: