News Just In

5/18/2021 04:50:00 PM

அக்கரைப்பற்றிலிருந்து சென்ற கார் வீதியை விட்டு விலகி 100அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து...!!


நுவரெலியா- இராகலை, சூரியகந்தை பகுதியிலுள்ள பிரதான வீதியில் பயணித்த காரொன்று, திடீரேன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பகுதியிலிருந்து ஹற்றன் பகுதியை நோக்கிச் சென்ற கார், நுவரெலியா- வலப்பனை பிரதான வீதியில் பயணிக்கும்போது, வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்திலுள்ள நுவரெலியா இராகலை பிரதான வீதிக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணமென இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





No comments: