News Just In

4/12/2021 04:51:00 PM

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள ஏற்றுமதி...!!


புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் சில இன்று திங்கட்கிழமை மீள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளன.

இன்று அதிகாலை கொழுமபு துறைமுகத்தை வந்தடைந்த பார்பரா என்ற கப்பலில் இவ்வாறான 6 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தெரிவித்தார்.

இன்றைய தினம் குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படும் போது கொழும்பு துறைமுகத்தில் ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
பார்பரா என்ற கப்பலில் 6 கொள்கலன்கள் எற்றப்பட்டள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய இறக்குமதி செய்யப்பட்ட மூலக் கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் அடங்கிய இந்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏனைய இரு நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறிருப்பின் இவ்வாறு புற்று நோய் மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று சுங்க திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்'ளது.

எவ்வாறிருப்பினும் ஏனைய இரு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து , பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அவற்றையும் துரிதமாக மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இறக்குமதி செய்யப்பட்ட அதே அளவு எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படுகிறதா என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு இவ்வாறு அபாயம் மிக்க எண்ணெய்யை இறக்குமதி செய்து அவர்களால் இழைக்கப்பட்ட தவறுக்காக தண்டப்பணம் அறவிடப்படும்.

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்களால் அவர்களின் செலவின் அடிப்படையிலேயே இவை மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சுங்க திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் காணப்படுகின்ற வசதி குறைபாடுகளின் காரணமாகவே குறித்த நிறுவனங்களின் களஞ்சியசாலைகளில் அவற்றை களஞ்சியப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிறுவனங்கள் அவற்றின் தேவைக்கு ஏற்பட்ட இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிக்க முடீயாது. சுங்க திணைக்களத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு புறம்பாக செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: