News Just In

4/18/2021 08:02:00 AM

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 மி.மீ.க்கு மேல் கடும் வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments: