News Just In

4/25/2021 01:12:00 PM

கொரோனா தொற்று தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...!!


தடுப்பூசி வழங்கப்படுவதே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான தீர்வாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஆரம்பம் முதல் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களையும் முறையாக பொதுமக்கள் கைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்க்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் அனுமதியளிக்க்படவுள்ள தடுப்பூசிகளை நாட்டுக்குக்கு கொண்டுவருவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரை astrazeneca முதலாவது கொரோனா தடுப்பூசி 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு பெற்றுக்கொடுக்க்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாவது தடுப்பூசி எதிர்வரும் மேமாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கென astrazeneca கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுப்படும் உலகின் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஸ்யாவிடம் இருந்து இரண்டு இலட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் வாரத்திலும், நான்கு இலட்சம் தடுப்புசிகள் மே மாத முதல் வாரத்திலும் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், 8 இலட்டசம் தடுப்பூசிகள் ஜுன் மாதமும், 12 இலட்சம் தடுப்பூசிகள் ஜுலை மாதத்திலும் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்தவுடன், சீனாவினால் வழங்கப்பட்டுள்ள சினபாம் தடுப்பூசி மக்கள் பாவனைக்கு உட்ப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: