News Just In

4/18/2021 07:52:00 PM

யானை சண்டை பிடிக்க தகரப்பத்தைகள் அடிபடுவது போல் இலங்கை அடிபட முடியாது- ஏ.எல்.எம்.அதாவுல்லா!!


நூருல் ஹுதா உமர்
இனவாதம் பேசுவதை நிறுத்திவிட்டு தேசியவாதம் பேச ஆரம்பிப்போம் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார் . கிண்ணியா பொது நூலக மண்ட பத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வின்போது பிரதம கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

தொடர்ந்தும் உரையாற்றுகையில் இலங்கை சுதந்திரமடைய முன்னர் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் என நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்தார்கள் ஆனால் தற்போது மறைமுகமாக அது நடக்கிறது முஸ்லிம் என்ற பேரில் சஹ்ரான் என்கின்ற குண்டுதாரியை ரிமோட் ஊடாக இயக்கினார்களோ என்னவோ தெரியாது அது இன்று நாடுமுழுவதும் சர்வதேசம் முழுதும் பரவலாக பேசப்படுகிறது . முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்த நாட்டில் பகை இல்லை அது போன்று முஸ்லிம்களுக்கும் தமிழ் சிங்களவர்களுக்கும் பகை இல்லை தொன்று தொட்டு பல்லாண்டு காலம் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தவர்கள் பகைகளை அன்றே 1915 களில் இந்தியாவில் இருந்து வந்த ஒருகூட்டம் உருவாக்கியது.

அப்பாவி முஸ்லிம்களையும் அப்பாவி கிறிஸ்தவர்களையும் நமது நாட்டில் குழப்பியடித்து இன வஞ்சமும் வர்மத்தையும் தோற்றுவித்திருக்கிறார்கள் . இதற்கான மருந்துகளை கட்டவே தேசிய காங்கிரசும் இருக்கிறது . வெளிநாட்டு அழுத்தங்கள் இல்லாமல் யாப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும். மாகாண சபைத் தேர்தலை விரும்பவில்லை நமக்கான காணி, கல்வி, கலாசார, மொழி, உரிமைகள் போன்ற அதிகாரங்களையே வேண்டி நிற்கிறோம். அரசு 3/2 பெரும்பான்மை பெற்றது மாகாணசபைத் தேர்தலை நடாத்தவல்ல. நாட்டுமக்கள் வாழ் வதற்கான ஒரு யாப்பை உருவாக்கி அதனை எப்படி பாவிப்பது பற்றியே பேசப் படவேண்டும்.

கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசின் போது நல்லாட்சியில் மாகாண சட்டமூலத்தை நான்கு மணி நேரத்துக்குள் நிறைவேற்றி ரிஷாத், ஹக்கீம் போன்றவர்கள் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு என்ற கெசட்டை கொண்டு வந்தார்கள். அது சிறுபான்மைக்கு பாதிப்பு என நாங்கள் சொன்னோம் அவர்கள் ஏற்கவில்லை ஒரு புறம் கொரோனா, பொருளாதார கஷ்ட நிலை என தொடர்கிறது. வெளிநாட்டு வங்குரோத்து கபளிகரத்தில் இருந்து இலங்கை விடுபட வேண்டும். ஐரோப்பா போன்ற நாடுகள் உட்பட இலங்கையை சுற்றியுள்ள நாடுகளும் நம் தேசத்தையே வேண்டும் என சொல்கிறார்கள். யானை சண்டை பிடிக்க தகரப்பத்தைகள் அடிபடுவது போல் இலங்கை அடிபட முடியாது. வெளிநாட்டின் கோரப் பிடியில் இருந்து இலங்கை பாதுகாக்கப் படவேண்டும் . இலங்கையில் உள்ளவர்கள் தேசப்பற்றுள்ளவர்களாகவும் தேசிய வாதிகளாகவும் நாட்டின் பங்காளிகளாக மாற வேண்டும் என்றார் .

No comments: