மட்டக்களப்பு - ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் ஏறாவூரின் அரசியல் முன்னோடிகளான முன்னாள் விசேட ஆணையாளர் மர்ஹும் எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் மற்றும் முன்னாள் பிரதி;யமைச்சர் டொக்டர் பரீட் மீராலெப்பை ஆகியோரின் நினைவாகவும் நடாத்தப்பட்ட கிரிக்கெற் இறுதிச் சுற்றுப்போட்டியில் 1வது இடத்தை அக்கரைப்பற்று பிபிபி (BBB) அணியினர் பெற்றுக் கொண்டது.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லுஸரி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை மாலை போட்டியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இறுதிச் சுற்றுப்போட்டியில் 2வது இடத்தை மட்டக்களப்பு கோட்டைமுனை இளைஞர் விளையாட்டு கழகமும். 3வது இடத்தை ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டு கழகமும் தக்க வைத்துக் கொண்டன.
கிரிக்கெற் சுற்றுப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அணியினருக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் வெற்றிக் கிண்ணங்களையும் பணப் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.
1வது இடத்தை தனதாக்கிக் கொண்ட அக்கரைப்பற்று பிபிபி (BBB) அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் 2வது பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு கோட்டைமுனை இளைஞர் விளையாட்டு கழகத்திற்கு வெற்றிக் கிண்ணமும் 20 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன.
No comments: