நுவரெலியா மாவட்ட வலயக்கல்வி பணிமனையின் வழிகாட்டுதலில் நடைபெற்ற குறித்த நிகழ்வை PAC குழுமத்தின் மலையக ஒருங்கிணைப்பாளர் திரு. கர்ணன் சங்கர்நாத் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த நிகழ்வுக்கு PAC குழுமத்தின் பிரதிச்செயலாளர் செல்வி. நிதர்சனா ரவிந்திரநாதன் அவர்கள் தலைமை தாங்கியிருந்ததோடு மேற்படி நிகழ்வுக்கு வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர் திரு. V.சாந்தகுமார் அவர்களும், பாடசாலை அதிபர் திரு. நாகரெட்ணம் தங்கராஜ் அவர்களும் லிந்துலை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.W.B.ஹேரத் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி கஜானா சந்திரபோஸ், PAC குழுமத்தின் மனிதவளப்பிரிவின் மேலதிக இணைப்பாளர் திரு.ஜோர்ஜ் அபராஜிதன், மனிதவளப்பிரிவு உத்தியோகத்தர் செல்வி. தனுஷாங்கி, பிரதி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் திரு.கிருபானந்தராஜா திவாகர், உத்தியோகத்தர் செல்வி செல்வராசா கௌதமி, மலையக உபஒருங்கிணைப்பாளர் செல்வி.ப.நிரோசா, வளவாளர் திரு. ஆனந்தராஜ் , திரு சுதர்சன், செல்வி பெல்சியா, செல்வி கிருஷாந்தி, செல்வி . கௌசல்யா, செல்வி வினோதினி, செல்வி .ரோகினி, செல்வி சசிகலா,திரு . சமிந்த, செல்வி .தக்ஷனி, செல்வி .கவிஷினி, செல்வி .கீதா உள்ளிட்ட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மாணவர்களின் தலைமைத்துவம் மற்றும் உளவியல்சார் கருத்தரங்கை PAC குழுமத்தின் வளவாளர்களான செல்வி. உதயகுமார் யோபனா (Dip.in. Psychology), மற்றும் செல்வி. சந்திரன் பிரசாந்தி (உளவியல் ஆலோசகர் WIN) ஆகியோர் நடாத்தியிருந்தார்கள்.
மாணவர்களின் திறன்காண் பரிட்சைகளும், ஆக்கத்திறன் செயற்பாடுகளும் இருவேறு கட்டங்களாக நடைபெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது.
அத்தோடு கலந்துகொண்ட அதிதிகளுக்கு PAC இன் முத்திரை பதிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments: