News Just In

3/29/2021 07:23:00 PM

களுவாஞ்சிகுடி வைத்தியசாலை மற்றும் பாடசாலைக்கு சாணக்கியன் கண்காணிப்பு விஜயம்!!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(திங்கட்கிழமை) வைத்தியசாலை மற்றும் பாடசாலைக்கு கண்காணிப்பு விஜயம் செய்திருந்தார்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாகவே களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி என்பவற்றிற்கே அவர் கண்காணிப்பு விஜயம் செய்திருந்தார்.

அங்கு காணப்படும் பிரச்சனைகள் மக்கள் மற்றும் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வளப்பற்றாக்குறை என்பவற்றை இரா.சாணக்கியன் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், இதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு துரிதமாக மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆராய்ந்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான திடீர் விஜயங்களை மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளலாம் தீர்மானித்துள்ளதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.





No comments: