(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
விவசாய அமைச்சின் அங்கீகாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021 சிறுபோக நெற்செய்கையினை ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் கூட்டம் தற்போது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில டங்கும் ஆயித்தியமலை, புது மண்டபத்தடி, உன்னிச்சை ஆகிய கமநலஅபிவிருத்தி சேவைகள் நிலையத்தின் கீழ் அடங்கும் பிரதேசங்களில் இவ்வருடத்துக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் கான திட்டமிடும் ஆரம்ப பயிர்செய்கை கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆரம்ப பயிற்சி செய்ய கூட்டத்தின்போது வவுணதீவு பிரதேச செயலகத்தில் அடங்கும் பாரிய உன்னிச்சைக் குளம்நீர்ப்பாசனத்தை அண்டி 11 888 ஏக்கரில் நெற்செய்கை பண்ணுவது என்றும் இதில் வலது கால் வலது கரை வாய்க்கால் ஊடாக 3 6 7 1 ஏக்கரிலும் ,இது தவிர புது மண்டபத்தடி கமநல சேவை நிலையை பிரிவில் அடங்கும் 830 ஏக்கரிலும், ஆயித்தியமலை கமநல சேவை நிலைய பிரிவில் அடங்கும் 83 ஏக்கரிலும்மாக இப் பிரதேசசெயலகப்பிரிவில் 12801 ஏக்கரில்இவ்வருடத்தில்சிறுபோகநெற்செய்கைமேற்கொள்வது என்று இந்த திட்டமிடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.
இது தவிர இப் பிரதேச செயலர் பிரிவில் அடங்கும் ஆயித்திய மலை புதுமண்டபம் தேடி ஆகிய கமநல சேவைகள் நிலைய பிரிவுகளில் சுமார் 648 ஏக்கரில் மட்டும் மேட்டுநிலபயிர்களைகளை மேற்கொள்வது என்றும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இலவச உர மானியத்தை உரிய வேலைக்குள் பெற்றுக் கொடுப்பது என்றும் நீர்ப்பாசன குளங்கள் நீர் நிரம்பி இருப்பதால் போதிய அளவு நீர் பாசனம் வழங்க கூடிய வசதிகள் இருப்பதாக வும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் இம்முறை இரசாயனப் பசளைகள் பயன்பாட்டினை குறைக்கும் வகையில் சிறுபோகத்தில் ஜனாதிபதியின் கொள்கை திட்டத்திற்கமைய இரசாயன பயளை குறைப்பதற்கு சேதனப் பசளைகள் 30 வீதத்தில் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது .இந்த திட்டமிடல் ஆரம்பப் பயிர்ச் செய்கை கூட்டத்தின்போது வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் எம் .எஸ். எம். ஹலீஸ் மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என் .நாகலிங்கம் விவசாய விரி வாக்கல் பிரதி பணிப்பாளர் கே .பேரின்பநாயகம் தேசிய உரச் செயலகத்தின் உதவி பணிப்பாளர் எம். எஸ். எம். சிராஜூன் ,கம நல அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் கே. ஜெகன்நாத், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி பணிப் பாளர் எஸ். ராஜகோபாலலிங்கம் , மாவட்ட திட்டமிடல் பணிப் பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பல திணைக்களங் களின் அதிகாரிகள் மற்றும் கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள் ,பொலிஸ் மற்றும் முப்படையின் அதிகாரிகளும் இங்கு பிரசன்ன மாகியிருந்தனர்.
3/06/2021 09:58:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பில் ஜனாதிபதியின் இரசாயன பசளை குறைப்பு திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!!
மட்டக்களப்பில் ஜனாதிபதியின் இரசாயன பசளை குறைப்பு திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: