News Just In

3/21/2021 08:01:00 AM

உதவும் கரங்கள் அமைப்பினால் மயிலாம்பாவெளியில் தொழில்முயற்சி மையம் திறந்து வைப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட மயிலாம்பாவெளியில் உதவும் கரங்கள் அமைப்பின் உதவியுடன் தொழில் முயற்சி மையமொன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தொழில்முயற்சி மையத்தின் ஊடாக 15பெண் தலைமை தாங்கும் அங்கத்தவர்களுக்கு தொழிற்வாய்ப்பு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச.ஜெயராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, குறித்த மையத்தினை திறந்து வைத்தனர்.

மயிலாம்வெளியில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்தில் குறித்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமையுடன், இவ்வில்லத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஆதரவற்ற 75சிறுவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான உணவு, உடை, கல்வி போன்ற அனைத்து வசதிகளும் உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை எடுத்துக்காட்டத்தக்கது.

இதன் போது, அரசாங்க அதிபரினால் புதிய இணையதளமொன்று அங்குறாப்பணம் செய்து வைக்கப்பட்டமையுடன், மட்டக்களப்பினைச் சேர்ந்த கௌரிகாந்தன் லோகேந்திரா நிழல்பிரதி இயந்திரமொன்றையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.










No comments: