News Just In

3/06/2021 08:10:00 PM

அக்கறைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து...!!


அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் சற்று முன் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்து ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளானவர்கள் இருவரும் இளைஞர்கள் என்பதோடு ஒருவர் மாவடிப்பள்ளியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





No comments: