News Just In

3/09/2021 09:17:00 AM

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மகளிர் எல்லே தொடரில் செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மகளிர் எல்லே தொடரில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பங்கு பற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது என ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் கே.சங்கீதா தெரிவித்தார்

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மகளிருக்கான எல்லே தொடர் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் ஞாயிற்றுக்;கிழமை (07); நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த போதிலும் அம்பாறை மாவட்ட அணி சமூகமளிக்காத நிலையில் நேரடியாக இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட அணிகள் பங்கேற்றன.
இரண்டு இன்னிங்ஸ் கொண்ட போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற திருகோணமலை மாவட்ட அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணி 30 பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை அணி மூன்று ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதல் இன்னிங்ஸில் அரைவாசிக்கு அதிகமான ஓட்டங்கள் பெறாத காரணத்தினால் பின் தொடர் முறையில் மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸினைத் தெடர்ந்த திருகோணமலை அணி நான்கு ஓட்டங்களைப் பெற்றது. இதனடிப்பாடையில் இரண்டு ஓட்டங்கள் வெற்றி இலக்காக தீர்மானிக்கப்பட்டது. இரண்டாது இன்னிங்ஸில் இரண்டு ஓட்டங்களை பெற்று மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியனானது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் நூர்தீன் முஹமட் நௌபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கி வைத்தார்.

No comments: