ஏறாவூர் - மட்டக்களப்பு புகையிரதப் பாதையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை நோக்கிச் சென்ற புகையிரதம் மட்டக்களப்பை நெருங்கும்போது மைலம்பாவெளி எனுமிடத்தில் வைத்து இந்தக் குடும்பஸ்தர் புகையிரதத்தில் மோதுண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலியாகிய கொக்குவில் கிராமம் 2ஆம் குறுக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் செல்வம் (வயது 41) எனும் குடும்பஸ்தரின் சடலம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

No comments: