News Just In

3/30/2021 04:10:00 PM

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மற்றுமொரு காவல்துறை அதிகாரியின் தாக்குதல்!!


ஹைலெவல் - மஹரகம - பன்னிபிட்டிய பிரதேசத்தில் நேற்று போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் பாரவூர்தி சாரதியை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாக்குதலை மேற்கொண்ட கான்ஸ்டபிள் மற்றும் பாரவூர்தியின் சாரதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மற்றுமொரு காவல்துறை அதிகாரியினால் நபரொருவர் தாக்கப்படுகின்றமை தொடர்பான புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் வீரவில காவல் பிரிவிற்குட்பட்ட பிரதேச வீதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: