News Just In

3/10/2021 02:36:00 PM

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாதனை பெண்களின் கௌரவிப்பு!!


சர்வதேச மகளிர் தின விசேட வைபகமும், சாதனை பெண்களின் கௌரவிப்பும் குரு சமூக ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும் , சாய்ந்தமருது ப்ரேவ் இளைஞர் கழகத்தின் தலைவருமான ஹிஸாம் ஏ பாவாவின் தலைமையில் “நீங்கள் எம் தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட கணக்காளர்கள் சேவை அதிகாரியும், வலயக்கல்வி அலுவலக பிரதம கணக்காளருமான வை.ஹபீப்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி சகரிகா தமயந்தி கலந்து கொண்டார்.

மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் அலி, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பு உத்தியோகத்தர் ஹாரூன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் எஸ்.எம்.றிஹான், நிஸ்கா பணிப்பாளர் சபை முன்னாள் பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்விப்பணியாற்றி வரும் கல்முனை வலய உதவிக்கல்வி பணிப்பாளர் நஸ்மியா சனுஸ், மக்கள் பிரதிநிதியாக செயற்பட்டு வரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுஹைல் அஸீஸ், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். ரிஸ்வானுல் ஜன்னா உட்பட சாதனை பெண்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

(நூருல் ஹுதா உமர்)







No comments: