News Just In

3/15/2021 05:04:00 PM

எமது செய்திக்கு பலன், கிரீன் பீல்ட் மக்களின் இரு பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது!!


நூருள் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலக மற்றும் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள கிரீன் பீல்ட் மக்களின் பிரச்சினைகளில் ஒன்றான பாலம் பாவனைக்கு உகந்ததாக இல்லை என்றும் குடிநீர் விநியோகம் தொடர்பில் மிகப்பெரிய பிரச்சினைகள் உள்ளது தொடர்பிலும் குறித்த துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செய்திகள் மற்றும் கட்டுரைகளை பிரசுரித்திருந்தோம்.

அதன் பலனாக குறித்த பாலத்தை நேரடியாக சென்று பார்வையிட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் பாலத்தை புனரமைக்க வேண்டிய அவசியம் உள்ளதை உணர்ந்து உடனடியாக பாலத்தை மக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்கும் பணியில் துரிதமாக இயங்கி இப்போது பாலம் மக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கூட்டங்கள் கூடுவதில் மட்டுமே இருந்துவந்த குடிநீர் விநியோகம் தொடர்பிலான பிரச்சினைக்கு இப்போது நிரந்தர தீர்வுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

குறித்த பிரதேச அரசியல்வாதிகள் தலையிட்டு அவசரமாக இவ்விடயம் தொடர்பில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு எங்களின் செய்திகளில் வலியுறுத்தி இருத்தோம். அதன் விளைவாகவும், அந்த மக்களின் போராட்டங்களினாலும் தனி மானிகளை பொருத்தி நிரந்தர நீர் விநியோகத்தை உறுதிப்படுத்த கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது சொந்த நிதியிலிருந்தும் ஒதுக்கீடுகளை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிரீன் பீல்ட் மக்களின் பிரச்சினைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுசேர்த்து தீர்வை பெற்றுதந்த ஊடகவியலாளர், ஊடக நிறுவனங்கள், அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட இவ்விடயம் தொடர்பில் கரிசனை செலுத்திய அனைத்து உறவுகளுக்கும் கிரீன் பீல்ட் மக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.




No comments: