மேலும் அவர் குறிப்பிடுகையில் பரீட்சைத் திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, 05ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை சென்ற வருடம் நடத்தப்பட்ட து. தற்பொழுது கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாட்டின் 4513 நிலையங்களில் நடத்த முடியும் என்றால். யாப்புக்கு இணங்க இலங்கை அதிபர் சேவை தரம் 3 க்கு இணைத்துக்கொள்ள ஒரே நாளில் நடைபெறும் போட்டிப் பரீட்சையை நடத்த முடியாது எனக் கூறிக்கொண்டு அமைச்சரவை தீர்மானத்தில் யாப்புக்கு முரணாக அடிமட்ட அரசியல் தீர்மானத்தை எடுத்திருப்பது மிகவும் மோசமான செயல்பாடாகும்.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கும் தகுதி உடைய பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கும். போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்களுக்கும். யாப்புக்கு மாறாக எடுக்கப்பட்ட இவ்வாறான தீர்மானத்தினால் பாரிய அநீதி இழைக்கப்படும் என சங்கத்தின் உப தலைவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் போது அதில் ஐந்தாவது பந்தியின் நியதியின் அடிப்படையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பது, எழுத்துப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் உயர் புள்ளிகளை பெற்றுக்கொண்ட தொடரொழுங்கின் அடிப்படையில் காணப்படும் வெற்றிடங்களை அடிப்படையில் இரு மடங்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதோடு அதில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
அத்தோடு யாப்பின் ஆட்சேர்ப்பு நியதிக்கு முரணாக அமைச்சரவை குழு முற்றுமுழுதாக மீறியுள்ளதோடு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளையும் முறையற்ற வகையில் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கின்றது. இவ்வாறான முறையற்ற நியமனங்களை வழங்குவதனூடாக நாற்பத்து மூன்று லட்சம் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: