News Just In

3/16/2021 08:38:00 AM

சீனிக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதன் நோக்கம் மோசடியாகக் கருத முடியாது- சீனி விலை அதிகரிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையே!!


சீனிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு மோசடியாகக் கருத முடியாது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவை அனைத்தும் சீனி விலை அதிகரிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

145 ஆக இருந்த சீனியின் விலையை 105 ரூபாயாக குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்ட செஹான் சேமசிங்க, சீனியின் விலை குறைக்கப்பட்டிருக்காவிட்டால் விலை 200 ஆக உயர்ந்திருக்கு என கூறினார்.

மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் அரசியல் மோசடிகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனி வரி மோசடியினால் நாட்டிற்கு 15.6 பில்லியன் ரூபாய் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அண்மையில் நாடாளுமன்றத்தில் அரச நிதி தெரிவுக்குழுவிற்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

No comments: