News Just In

3/10/2021 06:44:00 PM

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 457 பேர் குணமடைவு!!


நாட்டில் இன்றையதினம் புதன்கிழமை (10.03.2021) மேலும் 457 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 83,210 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் 86,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 2,322 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 609 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 511 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: