News Just In

3/06/2021 10:27:00 AM

யாழில் நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று- திரையரங்குகளுக்கு சென்றவர்களுக்கு விசேட எச்சரிக்கை!!


யாழ்ப்பாண நகரிலுள்ள சினிமா திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களுக்குள் திரைப்படம் பார்க்கச் சென்றவர்களுக்கு கொவிட்-19 தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின், சுகாதாரப் பிரிவினை தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

குறித்த நபர்கள், தங்களது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையையோ அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேநேரம், வட மாகாணத்தில் நேற்றைய நாளில் 20 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுயானதாக அவர் தெரிவித்தார்.

No comments: