News Just In

3/06/2021 12:20:00 PM

கொழும்பு-பதுளை வீதியில் 10 அடி பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து- 35 பேர் படுகாயம்!!


பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற பஸ் இன்று(06.03.2021) காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெமோதரை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





No comments: