காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், பாதுகாப்புத் தரப்பின் பிரதானிகள் உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்
இதன்படி, முப்படையினர் மற்றும் பொலிஸாரை ஒன்றினைத்து, இந்தப் படையணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், காடழிப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு, 070 70 11 117 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதேச மட்டத்தில் சுற்றுச் சூழல் தொடர்பான குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநரினால் அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காடுகள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு, பாரபட்சமின்றி சட்டத்தை நிலைநாட்டுமாறும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: