News Just In

2/22/2021 08:32:00 AM

துபாயிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு; கொரோனா அச்சம்..!!


துபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் பெப்ரவரி 22 (இன்று) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துபாய் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மீண்டும் துபாய் துணைத் தூதரக வளாகத்தை கிருமி நீக்கம் செய்த பின்னர் அலுவலகம் பொது மக்களுக்காக திறக்கப்படும். மூடியிருக்கும் இந்த காலத்தில் அவசர நிலைமைகளில் பொதுமக்கள் slcg.dubai@mfa.gov.lk என்ற மின் அஞ்சல் மூலம் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments: