திருகோணமலை மாவட்டத்தின் முக்கியமான பாலங்களை அமைப்பது மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
இம் மாவட்டத்திலுள்ள வடசல் - கல்லடிவெட்டுவான் பாலம் கிண்ணியா,
சோலவெட்டுவான் - கண்டல்காடு பாலம் கிண்ணியா, சாபி நகர் - வேதத்தீவு பாலம் மூதூர், ஆலிம்சேனை - அறபா நகர் பாலம் மூதூர், சின்னக்கரச்சை பாலம் இறக்ககண்டி, சமுலம்குளம் பாலம் குச்சவெளி, பட்டிக்குடா பாலம் புல்மோட்டை, சலாமியா பாலம் புல்மோட்டை, போன்ற பகுதியிலுள்ள மக்கள் மிகவும் பயன்படுத்துகின்ற பாலங்கம் அமைக்கப்படுவதற்கான கேள்வி அறிவித்தல்களை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், இப்பாலங்களை அமைப்பது தொடர்பான இடங்களை பார்வையிடுவதற்கு பொறியியலாளர்கள் குழு இம்மாதம் 8 ஆம் திகதியளவில் இம்மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.



No comments: