News Just In

2/25/2021 05:17:00 PM

இலங்கை – இந்திய சுற்றுலா விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை..!!


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுற்றுலா விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் அதன் செயற்பாடுளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்பட்டது.

No comments: