News Just In

2/25/2021 11:44:00 AM

மருதமுனை பாடசாலைக்கு சர்வதேச தொண்டு நிறுவன அனுசரணையில் இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும்!!


மாளிகைக்காடு- நூருல் ஹுதா உமர்
ஜோர்தான் நாட்டின் ஸம்-ஸம் சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் கமு/ கமு/ அல்- மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவுக்கு நீர்தாங்கியும் இலவச நீர்வழங்கலும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களினதும், பொதுமக்களினதும் குடிநீர் தேவையை போக்க கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் இவ் அமைப்பினால் கடந்த பல மாதங்களாக நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஒரு லட்சம் ரூபா செலவில் கமு/ கமு/ அல்- மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தை புதன்கிழமை (24) பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைஸுல் ஹக்கீம் மற்றும் வர்த்தகர் எம்.ஐ.எம். அனஸ் ஆகியோர் இணைந்து மாணவர்களிடம் பாவனைக்காக கையளித்தனர். இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





No comments: