சுமார் மூன்று வருடங்களாக விடுமுறை எடுக்காமல் தொடராக பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆசிரியை ஒருவரை கெளரவிக்கும் நிகழ்வு வாழைச்சேன வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் கடமையாற்றி வரும் எம்.ஏ.எப்.தஸ்லீமா எனும் ஆசிரியை ஒருவரே இவ்வாறு பாடசாலை அதிபர் காரியாலயத்தில் வைத்து நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவர் சுமார் மூன்று வருடங்களாக எவ்வித விடுமுறையும் பெறாமல் தொடராக பாடசாலைக்கு வந்து கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
அத்தோடு, அதிபரினால் வழங்கப்படும் வேலைகளை பாடசாலை நலன்கருதி சிறப்பாக செய்துவருகிறார் எனவும் பாடசாலையின் அதிபர் அல் ஹாஜ் என்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.
இவ்வாறு விடுமுறை பெறாமல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சேவையாற்றி வரும் ஆசிரியை எம்.ஏ.எப்.தஸ்லீமாவுக்கு பாடசாலை நிருவாகம் சார்பாக தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று அதிபர் அல் ஹாஜ் என்.எம். ஹஸ்ஸாலி தெரிவித்தார்.

No comments: