News Just In

2/18/2021 02:51:00 PM

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் காரியாலய பிரிவுகளிலிருந்து பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள நடவடிக்கை!!


எப்.முபாரக்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு உடனடியாக இலவசமாக பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாரக் தலைமையில் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்றது.

இதில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 42 கிராம உத்தியோகத்தர் காரியாலய பிரிவுகளிலிருந்து பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்காக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து சேவையைப் பெற்றுக்கொண்டனர்.

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையிலும் இந்ந நடமாடும் சேவை தொடர்ச்சியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: