சீடாஸ் கனடா அமைப்பின் நிதிப்பங்களிப்பில் பொத்துவில் பிரதேசத்தில் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பாடசாலைகளான கமு/திகோ/பொத்துவில் மெ.த.க.மகாவித்தியாலயம், கமு/திகோ/ஊறணி சரஸ்வதி வித்தியாலயம்,கமு/திகோ/பாணமை அ.த.க.பாடசாலை ஆகியவற்றில் தரம் 11 ல் கல்வி கற்கும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு விஷேட செயலமர்வுகளை பொத்துவில் புத்தொளி மன்றம் நடாத்தி வருகின்றது.
அதனடிப்டையில் இன்று பொத்துவில் மெ.த.க. மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக கணித பாட செயலமர்வு நடைபெற்றது.
தொடரந்து பத்து செலமர்வினை விஷேட பாடங்களுக்கு நடாத்துவதற்கு சீடாஸ் கனடா நிதியுதவி வழங்கியுள்ளதுடன் அதற்கான ஒத்துழைப்பை சீடாஸ் கனடா இலங்கை கிளையினர் வழங்கியுள்ளனர். இச்செயலமர்வினை புத்தொளி மன்றத்தின் தலைவர் திரு.த.வசந்தன் மற்றும் செயலாளர் திரு.கோ.சிறிதரன் ஆகியோர் ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
No comments: