News Just In

1/22/2021 05:55:00 AM

மட்டக்களப்பில் சிடாஸ் கனடா நிறுவனத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் மேலும் வழங்கிவைப்பு!!


சிடாஸ் கனடா நிறுவனம் மட்டு அம்பாறை மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை சிடாஸ் சிறிலங்கா அமைப்பின் ஊடாக செயற்படுத்தி வருகின்றது.

கொவிட் 19 பரவல் காரணமாக வருமானத்தை இழந்துள்ள நிலையில் தொடர்மழை, வெள்ளப்பாதிப்பும் இணைந்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் இக்கற்றல் உபகரணப் பொதிகள் உரிய வேளையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நேற்று (2021.01.21) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளான மட்/புலிபாய்ந்தகல் அ.த.க பாடசாலை, மட்./பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயம், மட்/பூலாக்காடு அதக பாடசாலை, மட்/சிறுதேன்கல் அதக பாடசாலை, மட்/தரவை வாணி வித்தியாலயம், மட்/திகிலிவட்டை அதக பாடசாலை, மட்/பெரியவட்டுவான் கண்ணகி வித்தியாலயம், மட்/பெருமாவெளி வாணி வித்தியாலயம், மட்/ஈரளக்குளம் அதக பாடசாலை, மட்/இலுக்குப்பொத்தானை மலைமகள் வித்தியாலயம் ஆகிய 10 பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இக்கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் சிடாஸ் சிறிலங்கா அமைப்பின் தலைவர் திரு.க.பாஸ்கரன், செயலாளர் திரு.அ.சுகுமாரன், செயற்குழு உறுப்பினர் திரு. எஸ்.வீ.சுவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உபகரணப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










No comments: