இவ்வைபவத்தில் திகோ/பொத்துவில் மெ.மி.த.ம.வித்தியாலயம், திகோ/பொத்துவில் விபுலானந்த வித்தியாலயம், திகோ/ரொட்டை அ.த.க. பாடசாலை, திகோ/ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் பிரமுகர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுபகரணங்கள் வறிய, வருமானம் குறைந்த, போரினால் பாதிக்கப்பட்ட, அதை விட கொவிற் 19 நோய், வெள்ள அனர்த்தம் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கட்குவழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இவ்வைபவத்தில் இவ்வைபவத்தில் திரு.க.நல்லதம்பி ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர், திரு. ப.கிருஸ்ணபிள்ளை முன்னாள் மற்றும் ஓய்வுநிலை அதிபர், திரு கங்காதரன் கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொறியிலாளர் திரு ந.ரதிஷன் மற்றும் புத்தொளி மன்ற தலைவர் திரு.த.வசந்தன், செயலாளர் திரு. கோ.சிறிதரன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து நிகழ்வை கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் பிள்ளைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டமை மிகவும் சிறப்பம்சமாகும்.
இவ்வைபவத்தில் கற்றல் உபகரணம் வழங்குவதன் நோக்கம் மாணவர்களின் கல்வி மேம்பாடு என்பதுடன் வறுமை மாணவர்களின் பாதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதனை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பாக வழங்கியவர்கள் தொடர்பான விபரங்களும் தெரிவிக்கப்பட்டன.
இவ்வைபவம் தொடர்பான படங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

No comments: