News Just In

1/09/2021 02:38:00 PM

கஷ்டப்பட்ட பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கஷ்டப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கு போரதீவுப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் நா.இந்திரநாதன் அவர்களின் சொந்த நிதியில் கற்றல் உபகரணங்களை வழங்கி இன்று (09) வைத்தார்.

செல்வாபுரம், மக்களடியூற்று, 38ம் கிராமம், தும்பாலை, திக்கோடை, இளைஞர் விவசாய திட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள 150இற்கும் மேற்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த கற்றல் உபகரண பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளின் போது பிரதேச சபை உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் இது போன்று பல அதிகஷ்டப்பட்ட பிரதேசங்களில் பல தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி பயின்று வருகின்றனர். 

அவர்களுக்கு நாம் சிறு தூண்டுகோலாக இருந்தால் அம்மாணவர்கள் பல சாதனைகளை புரிவார்கள். அவர்களுக்கான பௌதீக, ஆளணி வளங்கள் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே அது சாத்தியமாகும். அதனை தாண்டியும் சில மாணவர்கள் உச்சம் தொடுகின்றனர். 

பாலர் பாடசாலை வயதில் மாணவர்களுக்கு கல்வியினை சிறந்த முறையிலும், அவர்கள் அதனை விரும்பி ஏற்பதற்கேற்ற முறையிலும் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் போதாமை உள்ளமையும் சுட்டிக்காட்ட தக்கது எனவும் தெரிவித்தார்.





No comments: