இதன்படி 165 காத்தான்குடி 3 ஆம் பிரிவு, 165 ஏ காத்தான்குடி மேற்கு, 165 பி காத்தான்குடி கிழக்கு, 166 காத்தான்குடி இரண்டாம் பிரிவு, 166 ஏ காத்தான்குடி வடக்கு, 167 ஏ காத்தான்குடி வடக்கு, 167 பி காத்தான்குடி கிழக்கு, 167 டி புதிய காத்தான்குடி மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு அரசடி பிரதேசம் இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
இதேபோன்று, பண்டாரகம அட்டுலுகம பகுதியின், எபிட்டமுல்ல கிராமசேவகபிரிவு, மற்றும் பமுனுமுல்ல கிராமசேவகபிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொணராகலை படல்கும்புர அலுபொத்த பிரதேசமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கட்டுள்ளது.
குறித்த அனைத்து பகுதிகளும் இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுதளபதி அறிவித்துள்ளார்.





No comments: