போக்குவரத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி பிள்ளையாரடி பகுதியில் இன்று போக்குவரத்து பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன் பிஸ்கட் பெட்டிகளில் பரிசுப்பொருட்கள் போன்று கஞ்சாவை சூட்சகமாக பொதி செய்யப்பட்ட நிலையில் பொலிசார் கண்டபிடித்தனர்.
இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்ததுடன் 10 கிலோ கஞ்சாவை மீட்டடுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: