News Just In

12/09/2020 01:12:00 PM

முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு..!!


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை மனு, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

போலியான சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில், ஷானி அபேசகர உள்ளிட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, அவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகரவிற்கு, அண்மையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: