News Just In

12/20/2020 07:20:00 PM

மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!!


இலங்கையில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய மாகாணத்திலும், அம்பாறை, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகள் அதிக அபாயமுள்ள பிரதேசங்களாகவும் பெயரிடப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

No comments: