News Just In

12/12/2020 11:23:00 AM

சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முப்பது பேருந்துகளின் வழித்தட அனுமதிகள் ரத்து..!!


சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மூன்று வாரங்களில் முப்பது பேருந்துகளின் வழித்தட அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பேருந்துகள் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை கொண்டு சென்ற காரணத்தினால் அவற்றின் வழித்தட அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து அலுவலகங்களின் சோதனை நடவடிக்கையின் போது இந்த பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு பரிந்துரைத்த பின்னர் பேருந்து கட்டணங்களை 1.2 சதவீதம் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு அனுமதியளித்துள்ளது.

கொவிட் - 19 அபாயத்தைக் கருத்தில் கொண்டு இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை பேருந்தில் ஏற்றவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நாட்டில் ஒரு பாதுகாப்பான நிலை ஏற்படும் வரையில் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

இருப்பினும், தொழில்துறையின் சரிவை எதிர்கொள்ள பேருந்து கட்டண உயர்வு போதுமானதாக இல்லை என்று பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

No comments: