News Just In

12/31/2020 08:40:00 AM

வருட இறுதி நாள் என்ற காரணத்தினால் பிரதி பொலிஸ் மா அதிபர் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!


இலங்கையில் சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்

இன்றைய தினம் வருட இறுதி நாள் என்ற காரணத்தினால், மக்களை ஏமாற்றும் வகையில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பரங்கள் வெளியாகக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பணம் மற்றும் பரிசில்களை வழங்குவதாகக் கூறி வெளியாகும் விளம்பரங்கள் குறித்து, எச்சரிக்கையாக செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு இணங்க, பணங்களை வைப்பிலிட வேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, நைஜீரிய பிரஜை ஒருவரினால், அண்மையில் இலங்கை பெண்ணொருவரிடம் சமூக வலைத்தளத்தின் ஊடாக, மூன்று கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: