மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்யக்கோரி பல போராட்டங்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களாக மாத கொடுப்பனவாக முதலில் 6000 ரூபாவும் பின் அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் பெரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இவர்களின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் ஐந்து வருடத்திற்குள் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தவுடன் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப் படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்த இவர்களுக்கு கடந்த 2020 செப்டம்பர் மாதம் பயிற்சியை நிறைவு செய்ததற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 77 ஆசிரியர்கள் தத்தமது ஆவணங்கள் வலயக்கல்வி பணிமனைக்கு கையளித்து இருப்பதுடன் மூன்று மாதங்கள் கடந்தும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக உடனடியாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தினை கோரியுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
S. Pradeep
0713280729
0773080729

No comments: