News Just In

12/09/2020 04:49:00 PM

ஹெரோயின் ரக போதை பொருளுடன் சிக்கிய நால்வர் கைது..!!


முல்லேரியா, அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லேரியா
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஹிம்புட்டான பகுதியைச் சேர்ந்த 32,38 ஆகிய வயதுகளுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹன்தொட்ட ,கொஸ்ஹேன வீதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 6 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினுடன் மொரட்டுவ - லுனாவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments: