சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று அச்ச நிலைமைக்கு மத்தியிலும் சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில், அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகளுக்காக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மனித உரிமைகள் தினம் வெறுமனே தத்துவ பேச்சுகளுடன் மட்டுப்படுத்தப்படாது, நடைமுறை சாத்தியமான ஒன்றாக அமைய வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், மனித உரிமையை பாதுகாத்து, ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க முன்னின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் ஊடாக அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டினதும், குடிமக்களினதும் நன்மைக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உரிமைகளை அனுபவிப்பது போன்றே, அதனுடன் தொடர்புடைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதுடன், நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக, உரிமைகளை வெற்றி கொண்டு, கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த மனித உரிமைகள் தினத்தில் கைக்கோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: