News Just In

12/08/2020 06:31:00 PM

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 419ஆக உயர்வு..!!


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 419ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று உப்புவெளியில் 2பேரும், அக்கரைப்பற்றில் 12பேரும், ஆலையடிவேம்பில் 3பேருமாக மொத்தம் 17 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, திருகோணமலையில் 18 பேருக்கும், மட்டக்களப்பில் 95 பேருக்கும், அம்பாறையில் 15 பேருக்கும், கல்முனையில் 291 பேருக்குமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 419 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்குமாறும், முகக்கவசங்களை அணியுமாறும், குழுக்களாக செயற்படுவதை குறைக்குமாறும், தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும், சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை சரியாக கடைப்பிடிக்குமாறும் அவ்வாறு கடைபிடிக்காதவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: