ஏறாவூர் நகர சபையின் விசேட அமர்வும் இரண்டாவது பட்ஜெட் சமர்ப்பிப்பும் செவ்வாய்க்கிழமை 22.12.2020 இடம்பெறும் என்று நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் அறிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு வரவு வெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கப் போவதாக நகரசபைத் தலைவர் கடந்த ஒக்ரோபெர் மாதம் அறிவித்திருந்தார்.
ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த ஒக்ரோபெர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சபையின் மொத்தமுள்ள 17 அங்கத்தவர்களில் 12 பேர் எதிராகவும் 4 பேர் ஆதரவாகவும் இருப்பதைத் தெரிவித்தனர்.
அதனால் அந்த வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்திருந்தது.
அந்த வாக்கெடுப்பு முடிவடைந்து கூட்டம் நிறைவுற்றதின் பின்னர் பாதீடு தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபை அங்கத்தவர்களிடையே சிறிது சலசலப்பும் ஏற்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி; இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் முறையே 5 4 3 2 1 1 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

No comments: