News Just In

12/20/2020 07:02:00 PM

சற்று முன்னர் மேலும் 262 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை 36929ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் 262 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 715 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 28 ஆயிரத்து267 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 491 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 171பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: