News Just In

12/10/2020 01:41:00 PM

கொழும்பில் நாளை இரவு 10 மணி முதல் 6 மணித்தியால நீர்வெட்டு அமுல்..!!


அவசர திருத்த வேலைகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை சுமார் 6 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை இரவு 10 முதல் கொழும்பு டீன்ஸ் வீதி மற்றும் டாலி வீதி உட்பட அனைத்துக் கிளை மார்க்கங்களிலும் 6 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு வொக்ஷோல் வீதி மற்றும் இப்பங்வெலை சந்தியிலிருந்து கொம்பனித் தெரு வரை, யூனியன் பிளேஸின் கொல்வின் ஆர் டி சில்வா மாவத்தை உட்பட மேலும் சில கிளை மார்க்கங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.%MCEPASTEBIN%

No comments: